Friday, 28 December 2012

இந்திய மாணவனின் நாக்கை வெட்டியெறிந்த கும்பல்


வெள்ளி, 28 டிசம்பர் 2012( 12:07 IST )
உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் பலவிதமான இனவெறி கொடுமைகளை சந்தித்து வரும் நிலையில், ஜெர்மனியில் உள்ள போன் பகுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் இந்தியர் ஒருவரின் நாக்கை வெட்டி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.

24 வயது நிரம்பிய இந்திய மாணவனை சுற்றி வளைத்த ஒரு மர்ம கும்பல், அவ‌ரின் மதம் பற்றி விசாரித்தனர். அதன் பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறாவிட்டால் நாக்கை வெட்டிவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். இதனை மறுத்து அங்கிருந்து வெளியேறிய மாணவனை அடித்து துன்புறுத்தி, நாக்கை வெட்டி எறிந்துவிட்டு அக்கும்பல் காரில் தப்பியது.

தெருவில் ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌மீது தொட‌ர்‌ந்து நட‌த்த‌ப்படு‌ம் இனவெ‌றி தா‌க்குதலை‌‌த் தொட‌ர்‌ந்து த‌ற்போது ஜெ‌ர்ம‌னி‌யிலு‌ம் இ‌ந்‌தியர்களு‌க்கு இ‌ந்த கொடுமை நே‌ர்‌ந்து‌ள்ளது.

No comments:

Post a Comment